உங்களுக்கு தெரியாத அல்லது மறந்துபோன விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கூகுள் வாய்ஸ் மெசேஜை ஒபன் செய்து, நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் செய்தியை பேசவும். அடுத்த சில நொடிகளில் அல்லது விநாடிகளில் உங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் கொண்டு வந்து கொடுக்கும்.
கூகுள் டிஸ்கவர் செயலி மூலம் உங்களுக்கு விருப்பமான தலைப்பை பின்தொடரலாம். இதன்மூலம் உலகம் முழுவதும் அந்த துறையில் நடைபெறும் அப்டேட்டுகளை நொடிப்பொழுதில் கைக்குள் கொண்டு வந்து தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, மியூசிக், அரசியல், பண்பாடு உள்ளிட்ட அனைத்து தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பின்தொடருங்கள். விருப்பமான இமேஜ், செய்திகள், லிங்குகள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
கூகுள் அசிஸ்டண்ட் மூலம், கேலெண்டர் நிகழ்வுகள் மற்றும் வரவிருக்கும் மீட்டிங்குகள் போன்ற கேலெண்டர் அப்டேட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் அழைப்புகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். நீங்கள் சொல்லும் நபருக்கு தொலைபேசியில் இருந்து அழைப்பு செல்லும்.
உங்களுக்கு தெரியாத மொழிகளைக் கூட கூகுள் மூலம் மொழிப்பெயர்த்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். நம் அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் அந்த செய்தியை மொழிப்பெயர்த்து தெரிந்து கொள்ளலாம்.