இன்று ஸ்மார்ட்போன்கள் இருந்தால் எதையும் செய்துவிட முடியும் என்றாகிவிட்டது. தொழில்நுட்பம் நன்கு அறிந்தவர்களுக்கே ஸ்மார்ட்போனில் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.
ஸ்மார்ட்போனில் ஆட்டோ ரொட்டேட் அம்சம் தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்து கொள்ளவும். இந்த அம்சம் எப்போதும் ஆன் செய்யப்பட்டிருந்தால் ஸ்மார்ட்போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடும்.
ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகும் போது பயன்படுத்தினால் பேட்டரி ஆயுள் சீக்கிரம் தீர்ந்துவிடும். இதனாலேயே சார்ஜிங் கேபிள் நீளம் சிறியதாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது அதில் ஏர்பிளேன் மோட் ஆன் செய்தால் வேகமாக சார்ஜ் ஆகும்
ஸ்மார்ட்போனில் இருக்கும் கன்டினிவஸ் ஷாட் எனும் அம்சத்தை பயன்படுத்தி ஒரு நொடியில் 20 புகைப்படங்களை படமாக்க முடியும். இவ்வாறு செய்ய ஷட்டர் பட்டனை தொடர்ந்து அழுத்திப்பிடிக்க வேண்டும். வால்யூம் பட்டனை இப்படியும் பயன்படுத்தலாம்.
அறிமுகமில்லாத புதிய இடங்களில் வாகனம் நிறுத்தும் போது இடத்தை நினைவில் கொள்ள வாகனம் நிறுத்தும் இடத்தை புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு புகைப்படம் எடுக்கும் போது வாகனம் நிறுத்திய இடத்தை சுலபமாக கண்டறிந்து விடலாம். வீடியோ எடுக்கும் போது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனினை மறைத்து விட்டால் சிறப்பான ஆடியோவினை பெறலாம்.
இது சற்று வித்தியாசமாக தெரிந்தாலும் நன்கு பலனளிக்கும் ஒன்றாகும். புகைப்படம் எடுக்கும் போது அதிகளவு வெளிச்சம் இருப்பின் கேமராவின் முன் கண்ணாடியை வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது அதிகப்படியான வெளிச்சம் கட்டுப்படுத்தப்படும். இதனால் புகைப்படம் அழகாகும்.
ஸ்மார்ட்போன் பேட்டரியை வெகு விரைவில் தீர்ந்து போக செய்வதில் போனின் பிரைட்னஸ் முக்கிய காரணம் ஆகும். இதனால் போனில் கருப்பு நிற வால்பேப்பர் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட்போன் சுத்தம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கழிவறைகளில் இருப்பதை விட அதிகளவு அழுக்கு மற்றும் கிருமிகள் மொபைல் போனில் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்தது.
போன் அலாரம் சத்தம் உங்களை உறக்கத்தில் இருந்து எழுப்பவில்லையா. இனி போனினை கோப்பையினுள் வையுங்கள். இவ்வாறு செய்தால் போன் எழுப்பும் சத்தம் முன்பை விட அதிகமாக இருக்கும். ஸ்மார்ட்போன் சீராக இயங்க வாரத்தில் மூன்று முறையேனும் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.