தேவையில்லாத லிங்க் வந்தால் க்ளிக் செய்ய வேண்டாம் !!

தேவையில்லாத லிங்க் வந்தால் க்ளிக் செய்ய வேண்டாம் !!

ஆன்லைன் கல்விக்காக அரசாங்கம் இலவச டேட்டாக்களை வழங்குவதை சில போலியான செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன, அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை நீங்கள் க்ளிக் செய்தால் உங்களது ரகசிய தகவல்கள் திருடப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (சிஓஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக வலைதளங்களில் மோசடி செய்யும் நோக்கத்தில் போலியான செய்திகள் பரப்பப்படுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது' என்று கூறியுள்ளது.

மேலும் கூறுகையில், 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கல்வி பயில ஏதுவாக இலவச ரீசார்ஜ் திட்டத்தை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று போலியான செய்து வருகிறது இதனை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளது.

உங்களது கணினி அல்லது ஸ்மார்ட்போனில் எவ்வித லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம், அது உங்களது ரகசிய தகவல்களை திருடிவிடும் என்று வாடிக்கையாளர்களை சிஓஏஐ வலியுறுத்தி இருக்கிறது. மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் ஏதேனும் செய்திகளை பெற்றால் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம்,

அது பல்வேறு விதமான கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகள் வந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவருக்கும் அனுப்பாமல் இருக்க வலியுறுத்துகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com