ஐபோன்களுக்கு இனி வாட்ஸ்அப் கிடையாதா?

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற எண்ணம் பெரும்பான்மையாக மக்கள் மத்தியில் பரவியுள்ளது. இந்த நேரத்தில் சில ஆப்பிள் ஐபோன் மொபைல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வெளியிட்டுள்ளது.

அதாவது iOS 11 இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் அக்டோபர் 24 ஆம் தேதி, இதன் காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, இந்த இயங்குதளங்கள் இருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. குறிப்பாக, ஐபோன் 5 (iPhone 5), ஐபோன் 5சி (iPhone 5C) ஆகிய மாடல்களுக்கு இதுவரை ஐஓஎஸ் 12 (iOS 12) இயங்குதளப் பதிப்பு கொடுக்கப்படவில்லை.

எனவே, இதில் இந்த மாடல் ஐபோன்கள் சிக்கிக் கொள்ளும். முக்கியமாக 2012ஆம் ஆண்டின் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்றளவும் பெருவாரியான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com