தற்போது ஆதார் அட்டையின் பயன்பாடும் அவசியமும் அதிகரித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டையை தான் நமது முக்கியமான அடையாளமாக கேட்கின்றனர். அந்த அளவுக்கு இது நமது வாழ்வின் முக்கிய அங்கமாகி மாறிவிட்டது.
ஆதார் அட்டை இல்லாமல், நமது முக்கியமான பல பணிகள் முழுமையடையாமல் போகும் வாய்ப்பு கூட ஏற்படும், அதுமட்டுமல்லாது ஆதார் அட்டை இல்லாவிடில், பல அரசுத் திட்டங்களிலிருந்தும் நம்மால் நன்மை பெற முடியாமல் போய்விடுகிறது.
அதனால் ஆதார் அட்டையின் தேவைகள் மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நாம் அதில் தேவையான மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்பை செய்யவேண்டியது அவசியமானதாகும்.