IRCTC ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதா?

தற்போதுள்ள ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களைச் செய்துள்ளது.
IRCTC ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதா?

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் யூசர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அப்டேட் செய்ய வேண்டும். முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த முறை கட்டாயமில்லை. கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து IRCTC தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "IRCTC யூசர்கள் தங்கள் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டும். யூசர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும். அதாவது, ஒடிபி மூலம் அப்டேட் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

IRCTC செயலி அல்லது இணையதளத்தில் முதலில் லாகின் (உள் நுழைதல்) வேண்டும். பின்னர், புரோபைல் பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஜிமெயில் அப்டேட் செய்ய வேண்டும்.

மின்னஞ்சல் மாற்ற விரும்பினால் எடிட் பட்டனை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளுங்கள். மாற்றும்போது, இமெயிலுக்கு மெசேஜ் செல்லும். அங்கு கிளிக் செய்து ஒகே செய்தால் அப்டேட் ஆகும்.

இதேபோல், மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். அதனை சரியாக கொடுத்தீர்கள் என்றால் மொபைல் அப்டேட் ஓவர். இந்த அப்டேட்டுகளை முடித்துவிட்டால் போதும். ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com