பயனர்களின் தரவை திருடிய வைரஸ் எதிர்ப்பு செயலிகள் !!

பயனர்களின் தரவை திருடிய வைரஸ் எதிர்ப்பு செயலிகள் !!

கூகுள் ப்ளே ஸ்டோரில் மால்வேர் எதிர்ப்பு மென்பொருளாக காட்சியளித்த ஆறு ஆப்ஸ்கள் சுமார் 15,000 ஆண்ட்ராய்டு பயனர்களின் முக்கிய தரவைத் திருடியதாக தகவல்கள் வெளியானது. கூகுள் இந்த விதிமீறலைக் கண்டறிந்த உடன் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பயன்பாடுகளை நிரந்தரமாக நீக்கி இருக்கிறது. இதுகுறித்த செக் பாயிண்ட் ரிசர்ச்சின் அறிக்கைப்படி, ஷார்க்போட் ஆண்ட்ராய்டு ஸ்டீலர் மென்பொருளைப் பயன்படுத்தி வைரஸ் தடுப்பு பயன்பாடுகள் என்ற பெயரில் பாஸ்வேர்ட்கள், வங்கி விவரங்கள் மற்றும் பயனர்களின் பிற தனிப்பட்ட தகவல்களை திருடுவதை மூன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 15,000-க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை பெற்றிருக்கிறது.

ஆடம் க்ளீன் பூஸ்டர் ஆன்டி வைரஸ், ஆன்டி வைரஸ் சூப்பர் க்ளீனர், ஆல்பா ஆன்டிவைரஸ் க்ளீனர், பவர்ஃபுல் க்ளீனர் ஆன்டி வைரஸ், சென்டர் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் என்ற பெயரில் இரண்டு என மொத்தம் ஆறு ஆப்ஸ்கள் ஆகும். கூகுள் ப்ளே ஸ்டோரில் தீங்கிழைக்கும் என கண்டறியப்பட்டு பின் நீக்கப்பட்டுள்ளது. ஷார்க்போட் பயன்பாடானது அனைத்து சாத்தியமான பயனர்களையும் குறிவைக்கவில்லை,

புவிஃபென்சிங் அம்சத்தை பயன்படுத்தி சீனா, இந்தியா, ரோமேனியா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலேரஸ் உள்ளிட்ட பயனர்களை புறக்கணிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கிறது. ஷார்க்போட் பயன்பாடானது பயனர்கள் உள்நுழையும் போது தங்கள் நற்சான்றிதழை சமர்பிக்க ஊக்குவிக்கிறது. பின் இந்த நற்சான்றிதழ் சாளரங்கள் ஹேக்கர்களுக்கு மாற்றப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக தகவல் வெளிவந்தது. அதாவது இந்த புதிய மால்வேர் பெயர் எலக்ட்ரான் பாட் என்று கூறப்பட்டது. குறிப்பாக இந்த மால்வேர் கூகுள், சவுண்ட்கிளவுட், பேஸ்புக், யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த மால்வேர் கணினிகளை தாக்கியுள்ளதாகவும், பின்பு பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் அடுத்தவர்களின் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செய்பாடுகளை செய்தவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை மால்வேர் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்களை, கேம்ஸ்களை தரவிறக்கம் செய்வது மூலம் பரவுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com