ஆன்லைனில் திரைப்படங்கள் வாடகைக்கு விடும் அமேசான் !!

அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை வாடகைக்கு விடும் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.
ஆன்லைனில் திரைப்படங்கள் வாடகைக்கு விடும் அமேசான் !!

ஆன்லைனில் திரைப்படங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சந்தாதாரர்களுக்கு வழங்காமல், அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் பயனர்களை குறிப்பிட்ட திரைப்படத்தை குறுகிய காலக்கட்டதிற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் வாடகைக்கு எடுக்கப்படும் திரைப்படம் 30 நாட்களுக்கு அப்படியே இருக்கும். எனினும், தரவுகளை பார்க்க துவங்கினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமே அவை இருக்கும்.

அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோரில் திரைப்படம் ஒன்றை UHD (4K) HD (1080/720p) மற்றும் SD (480p) ரெசல்யூஷனில் வாடகைக்கு எடுக்க ரூ. 499 கட்டணமாக நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. சற்றே குறைந்த ரெசல்யூஷன் அல்லது எஸ்.டி. தரவுகளை வாடகைக்கு எடுக்கும் போது குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை UHD தரத்தில் வாடகைக்கு எடுக்கும் போது, பயனரின் சாதனம் Copy Protection (HDCP)-Compliant Display சான்று பெற்றிருக்க வேண்டும். இது இல்லாத பட்சத்தில் தரவுகள் SD தரத்திலேயே ஸ்டிரீம் செய்யப்படும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com