2021-22- நிதியாண்டில் ரூ.2290 கோடி விற்பனை வருவாயை ஈட்டியிருக்கும் அலையன்ஸ் குரூப் மற்றும் அர்பன்ரைஸ்

2021-22- நிதியாண்டில் ரூ.2290 கோடி விற்பனை வருவாயை ஈட்டியிருக்கும் அலையன்ஸ் குரூப் மற்றும் அர்பன்ரைஸ்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனம் என புகழ் பெற்றிருக்கும் அலையன்ஸ் குரூப் (Alliance Group) மற்றும் அர்பன்ரைஸ் (Urbanrise), 2021-22- நிதியாண்டின்போது ரூ.2290 கோடி விற்பனை வருவாயை ஈட்டியிருப்பதாக இன்று அறிவித்திருக்கிறது. நிதியாண்டு 2022-23–ல் 25 மில்லியன் சதுரஅடிக்கும் அதிகமான குடியிருப்பு வளாக செயல்திட்டங்களை புதிதாகத் தொடங்கவும் இக்குழுமம் திட்டங்கள் தீட்டியிருக்கிறது.

பெங்களூருவில் ரூ.3575 கோடி முதலீட்டில் 10 மில்லியன் சதுரஅடி பரப்பளவிலும் , சென்னையில் ரூ.2350 கோடி முதலீட்டில் 7.5 மில்லியன் சதுரஅடி பரப்பளவிலும் மற்றும் ஹைதராபாத்தில் ரூ.2690 கோடி முதலீட்டில் 7.5 மில்லியன் சதுரஅடி பரப்பளவிலும் குடியிருப்புகளுக்கான கட்டுமான செயல்திட்டங்களை நிதியாண்டு 2022-23-ல் தொடங்க அலையன்ஸ் குழுமம் திட்டமிட்டிருக்கிறது.

அலையன்ஸ் குரூப் மற்றும் அர்பன்ரைஸ் குழுமத்தின் தலைவர் திரு. மனோஜ் நம்புரு இந்நிகழ்வு குறித்து பேசுகையில், “மாபெரும் வெற்றியுடன் இந்த நிதியாண்டை நிறைவு செய்திருப்பதில் நாங்கள் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். 2021-22 நிதியாண்டு எமது பெருமிதம்மிக்க பயணத்தில் குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்று தாக்கம் இருந்தபோதிலும் கூட ரியல் எஸ்டேட் தொழில்துறையில் பல முக்கிய மைல்கற்களை நாங்கள் வெற்றிகரமாக கடந்து சாதித்திருக்கிறோம். நிதிசார் ஒழுங்குக்கட்டுப்பாடே எமது நிறுவனத்தின் DNA வாகும்.

தென்னிந்தியா முழுவதிலும் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை பயனளிக்கும் வகையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு இதுவே வலிமையான சக்தியாக இருக்கிறது. இந்த நிதிசார் ஒழுங்குக்கட்டுப்பாடு தான் எமது நிறுவனத்தில் முதலீடு செய்ய உலகின் மிகச்சிறந்த நிதிநிறுவனங்களை கவர்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய சவரன் நிதியமான ADIA, கோடக் ரியால்ட்டி ஃபண்டு மற்றும் இன்னும் பல பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள் எமது நிறுவனத்தில் முதலீடு செய்து வருபவற்றுள் சிலவாகும்,” என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com