காலப்பயணம் செய்பவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை

காலப்பயணம் செய்பவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை

ஸ்டீஃபன் ஹாக்கிங். சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம் பக்கமாகத் திருப்பியவர். கோட்பாட்டு இயற்பியலில் அழிக்கமுடியாத அடையாளமாகத் திகழும் அவருடைய நினைவுநாள் இன்று.

''எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன,'' என்று ஒரு முறை கூறினார் ஸ்டீஃபன் ஹாக்கிங். அந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், அவருடைய கோட்பாடுகள், அறிவியல் உலகில் பல்வேறு விஷயங்களில் தெளிவான புரிதலைக் கொண்டுவந்தது. கருந்துளை விரிவடைகிறது என்றே நினைத்துக் கொண்டிருந்த சூழலில், அது சுருங்குகிறது என்ற கோட்பாட்டை முன்வைத்து, அதை நிரூபித்துக் காட்டினார்.

அனைத்து அறிவியல் மாமேதைகளையும் போலவே, ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் காலப்பயணம் குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்தால் காலப்பயணிகளுக்கு என அவர் ஒரு பார்ட்டியையும் ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டியின் மூலம், காலப்பயணம் உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கருதினார். ஒருமுறை, காலப்பயணம் என்பதைப் பற்றிய ஒரு சின்ன பரிசோதனையைச் செய்து பார்க்க, காலப்பயணம் செய்பவர்களுக்கு என ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டியை பற்றி அவருடைய "இன் டூ தி யூனிவர்ஸ்" ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது 2009-ம் ஆண்டு. பேரா.ஹாக்கிங் ஷாம்பெயின் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டி நடந்து முடியும் வரை அவர் யாருக்கும் அழைப்புகளை அனுப்பவில்லை. அது நடந்து முடிந்தபின், எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு வரக்கூடிய காலப்பயணிகளை வரவேற்கும் நோக்கில் அவர் அந்த பார்ட்டியை நடத்தினார்.

"ஒருவேளை என்றாவது ஒருநாள், எதிர்காலத்தில் யாராவது என்னுடைய பார்ட்டிக்கான அழைப்பிதழை பார்த்துவிட்டு, வார்ம் ஹோல் வழியாக காலத்தில் பின்னோக்கிப் பயணித்து பார்ட்டியில் வந்து கலந்துகொள்ளலாம்," என்று இன் டூ தி யூனிவர்ஸ் ஆவணப்படத்தில் அதுகுறித்து அவர் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com