இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 2021 சட்டப்படி, மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்த கணக்குகள் முடக்கப்படும். மார்ச மாத யூசர் பாதுகாப்பு மாதாந்திர அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பாக, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அறிக்கையில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில், அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு, முறைகேடான நடவடிக்கைகள் கண்டறியப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்பதை வாட்ஸ்ஆப் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பிப்ரவரி மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய சட்டம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை விதிமுறைகளை யாரெல்லாம் மீறுகிறார்களோ, அவர்களின் கணக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அடிப்படையில்தான் மார்ச் மாதம் 2022 ஆண்டில், முறைகேடான கணக்குகள் மீது 597 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் 112 கணக்குகள் சப்போர்ட் சம்பந்தப்பட்டது, 407 புகார்கள் வாட்ஸ்ஆப் கணக்கு தடை செய்யப்பட்டதற்கான அப்பீல் மற்றும் மீதமிருக்கும் கணக்குகள் புராடக்ட் ஆதரவு, பாதுகாப்பு ஆகியவை குறித்து புகார் செய்யப்பட்ட கணக்குகள் ஆகும்.