நீங்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது

உணவுத்துறையில் பணியாற்றும் நீங்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது என வடபழனி முருகன் கோவிலில் நடந்த சோதனை குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.
நீங்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது

சென்னை திநகரில் உள்ள தனியார் விடுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் உடன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட உதவியாளராக தமிழ்செல்வி என்ற திருநங்கை நியமனம், பணி நியமன ஆணையை அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர், தமிழகத்தை பொருத்தவரை உணவு மாதிரி ஆய்வகங்கள் ஒன்று தான் இருந்தது அதனால் உணவு பரிசோதனை செய்து முடிவு வரும் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது சென்னையில் மட்டும் இல்லமால் தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மாவட்டங்களில் உணவு பரிசோதனை மையங்கள் உள்ளது. உபரி உணவை வீணாக்காமல் பயன்படுத்துவோம் என்று திட்டம் தொடங்கப்பட்டு தற்போது அதுவும் செயல்பாட்டு வருகிறது. எனினும் இந்த திட்டம் 100 சதவீதமும் வெற்றி பெறவில்லை என கவலை தெரிவித்தார்.

வடபழனி முருகன் கோயில், பிரசாத கடைகளில் நேற்று நடைபெற்ற சோதனை குறித்து பேசிய அமைச்சர், உணவுத்துறையில் பணியாற்றும் நீங்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது. சரியான உணர்வுடன் செயல்பட வேண்டும். உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 379 திருக்கோவில்களில் பிரசாதம் வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com