சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், காடையாம்பட்டி பேரூராட்சிகளில் மறைமுக தேர்தல் தள்ளிவைத்ததை எதிர்த்து அதிமுக வார்டு உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து பதிலளித்த தேர்தல் ஆணையம்,
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல் நலக்குறைவு காரணமாக சில இடங்களில் தள்ளிவைக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் நான்கு பேரூராட்சிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.