நமக்கு நாமே திட்டத்திற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு

நமக்கு நாமே திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்திற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு

100 கோடி ரூபாய் மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்திற்கு ஏற்கனவே 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 50 கோடி ரூபாயையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பில் மீண்டும் செயல்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்கள் இந்த திட்டத்தில் கட்டலாம் என்று குறிப்பிடுள்ள தமிழக அரசு, பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைகளையும் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளலாம் என்றும் ஊரகப்பகுதிகளில் கோரிக்கைகள் அதிகளவு வரப்பெற்றால் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com