நாளை தொடங்குகிறது சட்டசபை கூட்டத்தொடர்

தமிழக அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுவதற்கான சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
நாளை தொடங்குகிறது சட்டசபை கூட்டத்தொடர்

2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது..அதன் தொடர்ச்சியாக 19ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பட்ஜெட் மீதும், 24ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பின், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெற, நாளை முதல் மீண்டும் சட்டசபை கூடுகிறது. நாளை, நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைப்பெற உள்ளது. அதன்பின், ஒவ்வொரு நாளும், இரண்டு அல்லது மூன்று துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைப்பெற உள்ளது.

நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தொடர், மே மாதம் 10ம் தேதி வரை நடைப்பெறுகிறது.. விடுமுறை நாட்கள் போக, மொத்தம் 22 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைப்பெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, 'நீட்' தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் என, பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அனல் பறக்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததும், அந்த துறை அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.. அதேப்போல், சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை, முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com