அதியமான் கோட்டம் அருகே அருங்காட்சியம் அமைக்கப்படும்

அதியமான் கோட்டம் அருகே அருங்காட்சியம் அமைக்க அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதியமான் கோட்டம் அருகே அருங்காட்சியம் அமைக்கப்படும்

சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை ஊராட்சி, அதியமான் கோட்டத்தை மேம்படுத்த அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 2009-ல் அதியமான் கோட்டம் அமைக்கப்பட்டதாகவும், 300 பேர் அமரும் அளவிற்கு உள்ள அதியமான் கோட்டம் அரசு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அதியமான் கோட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும்,எதிர்காலத்தில் அதியமான் கோட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

அப்போது குறிக்கிட்டு பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதியமான் கோட்டம் அருகே அருங்காட்சியகம் அமைக்க அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com