ஹிஜாப் வழக்குக்கும் தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை

ஹிஜாப் வழக்குக்கும் தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை

தேர்வுகள் வரவுள்ள நிலையில் ஹிஜாப் மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட போது, இவ்வழக்கிற்கும் தேர்வுக்கு எந்த தொடர்பும் இல்லை என தலைமை நீதிபதி விளக்கம் அளித்தார்.

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என்றும், கல்விகூடங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு ஆகும் அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது என்றும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்து கடந்த 15ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்கில் சார்புடைய 6 மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் மாணவர்களின் கல்வி சூழலை கருத்தில் கொண்டு இவ்வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு முன்பு மாணவிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 16ம் தேதி முறையிட்டார். ஆனால் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்இன்றையதினம்மீண்டும்மாணவிகள்தரப்பில்ஆஜரானவழக்கறிஞர்தேர்வுகள்வரக்கூடியநிலையில்இந்தவழக்கைஉடனடியாகவிசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படவேண்டும்எனதலைமைநீதிபதிஅவர்கள்முறையிட்டனர். அப்போதுநீதிபதிகள் "ஹிஜாப்விவகாரத்திற்கும்தேர்வுகளுக்கும்எவ்விதசம்பந்தமும்

இல்லை" எனவும்இந்தவிவகாரத்தைஉணர்ச்சிப்பூர்வமாக

அணுகவேண்டாம்எனவும்தலைமைநீதிபதிஎன்.விரமணா

அறிவுரைவழங்கினார். மேலும்இந்தவழக்கிற்கும்தேர்வுகளுக்கும்எந்ததொடர்பும்இல்லைஎனக்கூறிகோரிக்கையைநிராகரித்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com