இப்படி செய்யும் அரசு வேதனையில் சுற்றுலாப் பயணிகள்

அடிப்படை வசதிகள் இல்லாத சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் 2 நுழைவு கட்டணம் வசூலிக்கபடுகிறதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இப்படி செய்யும் அரசு
வேதனையில் சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கோம்பைத்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. 50 அடி உயரத்தில் இருந்து ஆர்பரித்து விழும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களான சனி ஞாயிறுகிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோம்பைத்தொழு ஊராட்சி சார்பிலும் புதிதாக செக்போஸ்ட் அமைத்து வாகனங்களுக்கு ரூ50 முதல் 100 வரையில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சின்னசுருளிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இரண்டு இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அதே நேரம் சின்னசுருளி அருவியில் பெண்கள் உடைமாற்றும் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்யாத நிலையில் எதற்காக வனத்துறை மற்றும் ஊராட்சி சார்பில் 2 இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com