இன்று காலை 10 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, சேந்தமங்கலம் தொகுதி யில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு முன்வருமா எனவும், மக்கள் தொடர்ந்து வாடகை கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளதால் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த நகர்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சேந்தமங்கலம் தொகுதி யில் ஏற்கனவே 60 வீடுகள் அடுக்குமாடி வாடகை வீடுகளாக இருப்பதாகவும், 51 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்..மேலும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து அவசியம் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேப்போல், பல இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மிக மோசமாக இருப்பதாகவும், இதற்காக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அதை சரி செய்ய உத்தரவிட்டுள்ளதால், புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தா.மோ அன்பரசன் குறிப்பிட்டார். பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.