விடுதலை செய்யப்பட்ட 32 மீனவர்கள் சென்னை வந்ததால் குடும்பத்தார் உற்சாகம்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழகம் மீனவா்கள் 32 போ் சென்னை வந்ததை அறிந்த மீனவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர்.
விடுதலை செய்யப்பட்ட 32 மீனவர்கள் சென்னை வந்ததால் குடும்பத்தார் உற்சாகம்

தமிழக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை ராணுவம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 28 தமிழக மீனவா்களையும் 4 காரைக்கால் மீனவர்களையும் கைது செய்தது.

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து நாகப்பட்டினத்தை சேர்ந்த 13 பேர், மயிலாடுதுறையை சேர்ந்த 3 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 பேர், ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 பேர், காரைக்காலை சேர்ந்த 4 பேர் என 32 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த 32 மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com