மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்றும் தொடரும்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்றும் தொடரும்

சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைப்பெறும், இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர். மேலும் இன்றைய வினா விடை நேரத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், கீதா ஜீவன், க.ராமசந்திரன், காந்தி, மூர்த்தி, சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மெய்யநாதன், கயல்விழி உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

பின்னர் நேரம் இல்லா நேரத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, தேர்வு மசோதா, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவைக் கூட்டத்தில் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசவுள்ளனர். அதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பண் பதிலுரை அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com