தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 2வது நாள் பொதுவிவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அவினாசி சட்டமன்ற அதிமுக உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், பட்ஜெட்டில் நிதி தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். அதற்கு நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பல்வேறு விளக்கங்களையும் அளித்தார்.
பின்னர் பேசிய தனபால், பெரியார் கருத்துக்களை பல்வேறு மொழிகள் மொழிபெயர்க்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதையும், தமிழ்மொழி அகரமுதலிக்கு நிதி ஒதுக்கியத்திற்கும் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்..
இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதுக்குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை பாராட்டி பேசியதற்காக, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்..