அரசு பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

அரசு பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2009ன்படி,பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தற்போது மறுகட்டமைப்பு செய்ய உள்ளதாக " நம் பள்ளி நம் பெருமை " என்ற முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது. கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் வீடு வீடாக சென்று பள்ளி கல்வி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் காலை 10 மணி முதல் 1 மணி வரை அந்த அந்த மாவட்ட அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளது. இதற்காக அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள் கலந்து கொள்வதாக பள்ளிக்கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது.

logo
vnews27
www.vnews27.com