சென்னை நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சிக்காலத்தில் அய்யன் மலை, சோளிங்கர் கோவிலில் அமைக்கப்பட்ட ரோப்கார் பணி முடிவுற்று திறக்கப்பட்டு இருந்தாலும் முழு பணியினை கடந்த ஆட்சி காலத்தில் செய்யவில்லை. இப்போது தமிழக அரசு மீதமுள்ள பணிகளை முடித்துள்ள நிலையில் அய்யன் மலை ரோப் கார் ஏப்ரல் 16 ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது என்றார்.
அதே போல் மருதமலை, திருநீர்மலை திருக்கழுக்குன்றம் ஆகிய திருக்கோயில்களில் ரோப் கார் வசதிக்கான தொழில்நுட்ப ஆய்வில் சாத்தியக்கூறு இருப்பதாக தகவல் வந்துள்ளது,இங்கு ரோப் கார் வசதி கொண்டு வரப்படும் எனவும், 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்த அந்த திருக்கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக் கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்து பணிகள் தொடங்கப்படும் என்றார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேசும் அதிமுக மத்திய பாஜக அரசுடன் இணைக்கமாக இருப்பதால் ஒன்றிய அரசை சந்தித்து முறையிட்டால் சிறந்த ஒன்றாக இருக்கும் என்ற அவர், பெட்ரோல் டீசல் விஷயத்தில் அதிமுக கருத்தை நம்பி மக்கள் ஏமாற தயாரக இல்லை என்றார்.