பெட்ரோல், டீசலை தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறிகளின் விலை

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல், டீசலை தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறிகளின் விலை

கோயம்பேடு சந்தையில் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதேபோல கோயம்பேடு சந்தையில் இருந்துதான் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு காய்கறியானது வினியோகம் செய்யப்படும். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் லாரிகளின் வரத்து இயல்பை விட அதிகமாக வந்ததால் காய்கறியின் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் காய்கறிகளை யாரும் அதிகளவில் வாங்க முடியாமல் கீழே கொட்ட கூடிய நிலையில் இருந்தது.இந்த நிலையில்தான் கோயம்பேடு சந்தையில் லாரிகளின் வரத்து சற்று குறைந்து விலை சற்று அதிகரித்துள்ளது.குறிப்பாக ஒரு கிலோவிற்கு 5 முதல் 10 வரை காய்கறிகளின் விலை ஏறியுள்ளது. பனிக்காலங்களில் காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாயின.

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைந்து சந்தைக்கு வரக்கூடிய பொருட்கள் குறைவாக உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com