
சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 6 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும், அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை விரைந்து அமல்படுத்துமாறு வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ராஜாராம், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் எங்களது எதிர்பார்ப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை, 6 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.