ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை

கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை!!

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 2020 மார்ச் 7ம் தேதி முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பாதித்த முதல் நபரை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தயங்கிய நிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் மருத்துவர்கள் குழு அந்த நபருக்கு சிகிச்சையளித்தனர். அன்று முதல் இன்று வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

அதில் 96% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.4% பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மார்ச் 7ம் தேதி முதல் இன்று காலை வரை என 2 ஆண்டுகள் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையாக உள்ளது. மொத்தம் உள்ள 2050 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிக படுக்கைகள் மட்டுமல்லாமல், அதிக நோயாளிகளுக்கு சிச்சையளித்த மருத்துவமனையாக திகழ்கிறது.

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த பொழுது, 47.3 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரு நாளைக்கு தேவைப்பட்ட நிலையிலும் அரசின் வழிகாட்டுதலில், மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் கையாளப்பட்டது.

2050 படுக்கைகளும் நிரம்பிய நிலையிலும், மற்ற இடங்களில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தியும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இத்தகைய கொரோனா போரில் களத்தில் இருந்து மக்களை காப்பாற்றிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, இன்று கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனையாக மாறி உள்ளது.

இது மருத்துவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட டவர் 3 என்ற கட்டிடம் முழுவதும் தற்பொழுது புறநோயாளிகளுக்கான வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com