
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் பெருமாள் பிள்ளை கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், உயிரிழந்த மருத்துவ குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கிட வேண்டும் எனவும், பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு கூட்டம் நடத்திட வேண்டும் எனவும் கடந்த 7 ஆண்டுகளாக பல் மருத்துவர் களுக்கு பணி நியமனம் வழங்கப்படாதது முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 டி 2 மூலம் பாதிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளுடன் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக பல் மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பல் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த போராட்டம் தொடங்குவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போராட்டத்தில் தற்போதைய தமிழக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என்பது வேதனைக்குரியதாக இருப்பதாக மருத்துவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.