ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம்தேதி,அன்று தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
1944 ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீவிபத்திற்குள்ளானது. PORT இக்கப்பலில் STIKINS" என்ற தோராயமாக 1200 கப்பல் வெடிப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக மும்பை தீயணைப்பு துறை ஈடுபட்டனர்.
கப்பலில் வீரர்கள் தீயணைக்கும் பணியில் உள்ள வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை தீயணைப்பு துறை சார்ந்த 66 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் ஏப்ரல் 14 ஆம்தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணியின் போது உயிர் நீத்தோர்களுக்கு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை தலைமையகத்தில் நடந்தது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம்- ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு, காவலர் வீட்டு வசதி கழகத்தின் இயக்குனரும், டிஜிபியுமான ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத்துறை இயக்குனரும் டிஜிபியுமான பிரஜ் கிஷோர் ரவி, தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜய சேகர், இணை இயக்குனர்கள் பிரியா ரவிச்சந்திரன், மீனாட்சி விஜயகுமார் மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள், தீயணைப்புத் துறையினர் வீர வணக்க ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு தீயணைப்பு துறை துவங்கப்பட்ட பின்பு இதுநாள் வரை அதாவது 1955-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை 33 தீயணைப்பு துறையினர் பணியின் போது இறந்துள்ளனர். அவர்களது பெயர் விவரங்களை நினைவு ஸ்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும் இறந்த தீயணைப்பு துறையினரின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு அவர்களது நினைவு போற்றப்பட்டது.