107 ரூபாயை தாண்டி விற்கப்படும் பெட்ரோல்...

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 107 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.
107 ரூபாயை தாண்டி விற்கப்படும் பெட்ரோல்...

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை 6 ரூபாய் 9 காசுகளும் உயர்ந்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றங்கள் இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் காணப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 140 டாலராக இருந்தது.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை உயரத்தொடங்கியது. எனினும் அப்போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115.62 டாலர் என்ற அளவில்தான் இருந்தது. இனிவரக்கூடிய நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என சொல்லப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து 107.45 ரூபாய்க்கு காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து 97.52 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com