தமிழகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் குறைவாக பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. அவசர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ஓமந்தூரர் மருத்துவமனையில் 11 நாட்களாக ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவில்லை. மாநிலம் முழுவதும் 20 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் டெல்லியில் ஒரு நாள் தோற்று 300 என அதிகரித்துள்ளது. குருகிராமிலும் பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி 98.7% முதல் தவணை செலுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை பூஜ்யம் ஆன பிறகு பொதுமக்கள் பலர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. தற்போது வரையும் 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல், 1.37 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. நோய் தொற்று பரவல் டெல்லியில் 2.7% என அதிகரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். மாஸ்க் அணிவது, கை கழுவுவது போன்றவை குறித்து நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும் நமது பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவது, சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
வெயிர்காலம் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிக நேரம் வெளியே நடமாடுவதை குறைக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும், வெயிலினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும்.
மரபணு பிறழ்ச்சி தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. நிபுணர்கள் பலர் கோவிட் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
முதியோர்கள் 30 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் முதல் தவணை செலுத்தவில்லை என்பது கவலை தர கூடியது. தமிழகத்தில் நேற்று மட்டும் 4 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். அதற்கு முந்தைய தினம் 2,800 பேர் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் போட்டு கொண்டுள்ளனர்.
பொது மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்வது நல்லது. ஒட்டுமொத்த நோய் தடுப்பு ஆற்றலை இது உருவாக்கும். 9 மாதம் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் மத்திய அரசின் வழிகாட்டுதல் உள்ளது.
பொது மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்வது நல்லது. ஒட்டுமொத்த நோய் தடுப்பு ஆற்றலை இது உருவாக்கும். 9 மாதம் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் மத்திய அரசின் வழிகாட்டுதல் உள்ளது.