
இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில், படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை எண் 1 LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் இதுகுறித்து இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து புறப்படும் வரை படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தரவும் போக்குவரத்துத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.