அயோத்தி மண்டபத்தை கையகப்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு.

சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர் உட்பட 75 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி மண்டபத்தை கையகப்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் அமைந்துள்ள அயோத்தியா மண்டபம் ராம்சமாஜ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. ராம்சமாஜ் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய துறை சார்பில் அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ராம்சமாஜ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராம்சமாஜ் மூலம் தொடரப்பட்ட அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தை ஆய்வு செய்து கையகப்படுத்த வந்தனர்.

அப்போது அதிகாரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், பாஜக நிர்வாகியான கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட பாஜகவினர் அயோத்தியா மண்டபத்தின் வாயிலை பூட்டி அதிகாரிகளை செல்ல அனுமதிக்காமல் வெளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அசோக் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அருகாமையில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். மேலும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை வழிமறித்து உள்ளே அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், கரு.நாகராஜன் உட்பட பாஜகவினர் 75 பேர் மீதும் அசோக் நகர் காவல்துறையினர் தடையை மீறி செயல்படுதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com