குப்பை சேகரிக்கும் வாகனங்களின் விவரங்களை அறிய புதிய இணையதளம்

வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் அதன் நேர விவரங்களை மாநகராட்சியின் இணைய தள இணைப்பில் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குப்பை சேகரிக்கும் வாகனங்களின் விவரங்களை அறிய புதிய இணையதளம்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 4,5,6,7 மற்றும் 8 ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் தெருக்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம் எனவும் மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பில் நேரடியாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள்தோறும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் நிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மண்டலம், வார்டு வாகனத்தின் ID எண், அதன் Trip எண். நேரம் மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் தெருக்களின் பெயர்கள் அடங்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/bov_route இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com