ஜெயின் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும்

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஜெயின் சமூகத்தினர்  வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும்

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மஹாவீர் ஜெயந்தியையொட்டி, இறைச்சி கடைகள் மூடப்படும். அதன்படி, இன்று (ஏப்.14) மஹாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.இதேநாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டில் பெரும்பாலனோர் இறைச்சி சாப்பிடுவது வழக்கம்.எனவே, இறைச்சி கடைகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை மாநகராட்சியின் நான்கு இறைச்சி கூடங்களும் இன்று மூடப்படுகிறது.

மேலும், ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இன்று இறைச்சி கடை மூட, அந்தந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்படலாம். அதற்கு மாநகராட்சி சார்பில் தடையில்லை" என்றனர்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com