சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, இராமேஸ்வரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இராமேஸ்வரத்தில் 780 மீன்பிடி படகுகளும், 1118 நாட்டுப் படகுகளும் உள்ளதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு நிர்வாக ரீதியாக 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என கூறினார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், ஏரியின் முகத்துவாரத்தில் படகுகள் வந்து செல்ல ஏதுவாக அதை சீரமைப்பதற்காக ரூ. 26.85 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.