கோவில்களுக்கு படையெடுக்கும் மலையாள மொழி பேசும் மக்கள்... விஷு பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு!!

மலையாள புத்தாண்டையொட்டி சென்னை ஐயப்பன் கோயில்களில் மலையாள மொழி பேசும் மக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில்

விஷு பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது போல், மலையாள மொழி பேசும் மக்களால் மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி,சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து கனி காணுதல் நிகழ்ச்சியை முடித்து, நீராடி புத்தாடை அணிந்து ஐயப்பன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்வம் செழிக்கும் வகையில் பக்தர்களுக்கு 1 ரூபாய் நாணயம் மற்றும் லட்டு வழங்கப்படுகிறது. கோவில்களில் மலையாள மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து குடும்பங்களுடன் வந்து தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com