மதுரவாயல் வட்டாட்சியர் & வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்.

முறையற்ற வகையில் பணியாற்றியதால் மதுரவாயல் வட்டாட்சியர் & வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரவாயல் வட்டாட்சியர் & வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்.

வருவாய் நிருவாக ஆணையர் சித்திக் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது, மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் மிகவும் அலட்சியமாகவும், பொதுமக்களிடம் கையூட்டு கேட்டு தொந்தரவு செய்ததும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மதுரவாயல் வட்டாட்சியர் முரளி, வருவாய் ஆய்வாளர் சோபியா ஆகியோரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது மட்டுமின்றி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தங்களது மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேரடியாக களத்தினை ஆய்வு செய்து முறையற்ற வகையில் பணியாற்றும் பணியாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் இராமச்ந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com