களை கட்டியது கோயம்பேடு மார்க்கெட்

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோயம்பேடு பூ, பழம், காய்கறி மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியுள்ளது
Koyambedu Market
Koyambedu Market

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு தமிழ் வருடபிறப்பு விமரிசையாக கொண்டாடபடவில்லை. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து முழு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில், பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது. கோயம்பேடு மலர் அங்காடியில் பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது .

மேலும் சென்னை கோயம்பேடு சந்தையில் தமிழ் புத்தாண்டையொட்டி, பூக்கள் விலை கடந்த வாரத்தை விட 50 முதல் 80 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதில், மொத்த விலையில், சாமந்தி ஒரு கிலோ, 140 - 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதேபோல், ரோஸ், 160 - 180, பன்னீர் ரோஸ், 80 - 100, செண்டு மல்லி, 60 - 70, மல்லி, 360 - 400, கனகாம்பரம், 500 - 600, அரளி பூ, 300, சம்பங்கி, 60 - 70 ரூபாய்க்கும் விற்பனையாயின.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com