சென்னையில் சொத்து வரி வசூலிப்பு தீவிரம்

சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து சொத்துவரி ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது
சென்னையில் சொத்து வரி வசூலிப்பு தீவிரம்

6 மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் இந்த சொத்துவரி சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சொத்துவரி செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தி முடிக்கவேண்டும். இதுவரையில் ரூ.650 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் சொத்துவரி வசூலிப்பை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

சொத்து வரி நிலுவை குறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். வழியாக உரிமையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பெரிய பாக்கி தொகை செலுத்தாத வீடுகள், வணிக பயன்பாட்டு நிறுவனங்கள் முன்பு பேனர் வைக்கப்படுகிறது.

சொத்துவரியை வசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. ரேடியோ மற்றும் விளம்பர பலகைகள் மூலமாக சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இது தவிர ஆட்டோக்கள் மற்றும் குப்பை அள்ளக் கூடிய ஆட்டோக்கள் மூலமும் சொத்துவரி செலுத்துவது குறித்த பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும் மண்டலம் வாரியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com