தணிக்கைத்துறைக்கு தலைமை இயக்குநரை நியமிக்க ரூ.99 லட்சம்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!
தணிக்கைத்துறைகளை உள்ளடக்கி தணிக்கை தலைமை இயக்குநர் நியமிக்க ரூ.99 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவுத் தணிக்கை துறை, பால் கூட்டுறவுகளின் தணிக்கை துறை,நிதி தணிக்கை துறை , இந்து சமய அற நிலையங்கள் தணிக்கை துறை, தமிழ்நாடு அரசு தணிக்கை துறை ஆகிய 5 தணிக்கை துறைகளில் இயக்குநர்கள், தணிக்கை தலைமை இயங்குனர் கட்டுப்பாட்டில் வருவார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி அன்று ஆளுனர் உரையில் நிதி மேலண்மையை மேம்படுத்தவும் தவறுகளை குறைக்கும் நோக்கில் தணிக்கை தலைமை இயக்குனர் பதவி இடம் உறுவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்திய தணிக்கை துறை அதிகாரி ( அயலக பணியாக) அல்லது தமிழக பிரிவை சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி தலைமை தணிக்கை இயக்குநராக நிமிக்கபடுவர். இதற்காக 99 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.