சிறுபான்மையினருக்கு தமிழக அரசு அரசாணை

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் தோற்றுவிப்பது குறித்துதமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
சிறுபான்மையினருக்கு தமிழக அரசு அரசாணை

சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் கட்டவும், மாவட்ட ஆட்சியர்கள் அலுவலக கட்டிடத்திலேயே மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நல விடுதிகள் மாவட்ட சிறுபான்மையினர் அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஐந்து மாவட்டங்களில் புதிதாக மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகங்கள் தோற்றுவித்தல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து, சிறுபான்மையினர் நல இயக்குனர் மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com