இவ்வளவு நாளா சேர்ந்த குப்பை கிடங்கு...

கோடிக்கணக்கான கொசுக்கள் வீட்டின் சுவர் காணப்படுவது வேதனை அளிக்கிறது. இப்படி கொசுக்கள் உருவாக காரணம் என்னத்தெரியுமா..?மாநகராட்சி கொட்டும் குப்பை கழிவுகள் தான்... இதனால் தொற்று நோய்கள் பரவும்....?
இவ்வளவு நாளா சேர்ந்த குப்பை கிடங்கு...

கோடிக்கணக்கான கொசுக்கள் உள்ள பகுதியாக வீட்டின் சுவர் காணப்படுவது வேதனை அளிக்கிறது. இப்படி கொசுக்கள் உருவாக காரணம் என்னத்தெரியுமா...? மாநகராட்சி கொட்டும் குப்பை கழிவுகள் தான்... இதனால் பல்வேறு வகையாக தொற்று நோய்கள் பரவும் ஆபத்து நிறைந்துள்ளது.

இந்தக்காலக்கட்டத்தில் எல்லா சுழலும் நமக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது. அதுமட்டும் இல்லாம எங்கு சென்றாலும் மிகவும் கவனமுடனும் விழிப்புடனும் செல்கிறோம்...(செல்லனும்)... மக்களாகிய நமக்கு நோய் தொற்று வரும்போது மாநகராட்சி பணியாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்..

கடந்த வருடத்தில் கொரோனா பரவலின் போது அவர்கள் பங்களிப்பு மிக அதிகம். இது அனைவரும் அறிந்ததே..! ஆனால் இங்கே காஞ்சிபுரம் மாநகராட்சி 25வது வார்டு கிருஷ்ணசாமி தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றனர். மக்களின் குடியிருப்பு  பகுதிக்கு அருகே மாநகராட்சியின் குப்பை கிடங்கு பல ஆண்டு காலமாக இருக்கிறது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை இங்கு கொட்டி வருகின்றனர். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி வருகிறது. இது தவிர, கொசு புழு வளருவதற்கு ஏதுவாக இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள், 'டெங்கு' காய்ச்சல் வந்துவிடுமோ என்று, பீதியில் உள்ளனர்.

சுகாதார சீர்கேடு குறித்து தெரு மக்கள் கூறியதாவது மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், கோரிக்கை மனுக்கள் கொடுத்து உள்ளோம். துாய்மை அவசியம், ஆனால் இதுவரை, மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே, இனியாவது மாசுபடுத்தும் இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, துாய்மைப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தயவுக்கூர்ந்து எங்கள் பகுதியின் மீது உங்கள் பார்வை படவேண்டும்... எங்கள் தெருவில் குழந்தைகள் அச்சமின்றி வெளியில் வந்து விளையாட வேண்டும்... எங்கள் குடும்பத்தின் ஒருவராக நினைத்து உதவிக்கேட்கிறோம்...

சிந்தியுங்கள்...! எங்கள் பகுதிக்கு நல்வழிகாட்டுங்கள்...!

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com