தீ தொண்டு வாரம்… சமையலறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையினர் மூலம் குடும்பப் பெண்களுக்கு சமையலறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீ தொண்டு வாரம்… சமையலறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு வாரம் ஆக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அதேபோல ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தீ தொண்டு வாரத்தையொட்டி முதல் நாளான நேற்று சென்னையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் குடும்பப் பெண்களுக்கு சமையலறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக சமையலறையில் வேலை செய்யும் பெண்கள் நைலான், ரேயான், சில்க் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என்றும், நல்ல காற்ரோட்டமுள்ள எளிதில் வெளியேறக்கூடிய பகுதியில் சமையலை இருக்க வேண்டும் எனவும், எதிர்பாராத விதமாக ஆடையில் தீபிடித்தால் ஓடாமல், கீழே படுத்து உருள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவரவர் இருக்கும் கட்டிடத்தில் தீப்பிடித்துவிட்டால் முதலில் வெப்பமும், புகையும் மேல்பகுதியில் தேங்கும் என்பதால் ஈரத்துணியை முகத்தில் மூடிக்கொண்டு கீழே தவழ்ந்தபடி வெளியேற வேண்டும் எனவும், சமையலறையில் பழுதடைந்த மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், ஈரக்கையால் மின் சாதனங்களை தொட வேண்டாம் எனவும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் புகைப் போக்கி, சிம்னி போன்றவற்றை எண்ணை அழுக்கு படியாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், எண்ணை கொதிக்கும்போது தண்ணீர் தெளிப்பது, வெடிக்கக்கூடிய பொருட்களை அடுப்பில் வைப்பதோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வீடுகளிலும் தீயணைப்புக் கருவிகளை வைத்திருப்பது அவசியம் எனவும், ஒவ்வொருவரும் தீயணைப்புக் கருவிகளின் செயல்பாட்டினை தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும், சமையலறையில் தேவையில்லாத பொருட்களை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் குடும்பப் பெண்கள் உட்பட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com