பயிர் கடன் தள்ளுபடி கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

பயிர் கடன் தள்ளுபடி கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கத்தின் பயிர் கடன் தள்ளுபடி கான கட் ஆஃப் தேதியை 31-01-2021 ல் இருந்து மார்ச் 31-2021 வரை நீட்டிக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன்: இந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலைவாசிகள் குறைவாகவே வெங்காயம் தக்காளி உள்ளிட்ட வைக்கு குறைவான பணம் கிடைப்பதால் போதிய அளவில் பயிர் கடன்களை தடுப்பு கட்டுவதற்கான பிரீமிய தொகை தங்களிடம் இல்லாத காரணத்தினால் பயிர் கடன் தள்ளுபடி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனவும்,

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா, ஊரடங்கு மழை வெள்ளம் ஆகியவற்றால் மிகப்பெரிய சேதத்தை விவசாயிகள் சந்தித்து இருப்பதால் எதிர்பார்க்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பு ஒரு பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் ஜனவரி மாதங்களில் கடனை திருப்பி கட்டிய விவசாயிகளுக்கு பிப்ரவரி மார்ச் மாதங்களில் மறு கடன் வழங்கப்பட்டது மீண்டும் அந்த விவசாயிகள் வருகிற பிப்ரவரி மார்ச் மாதங்களில் பயிர்க் கடனை திருப்பிக் கட்ட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறினார். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரை பலமுறை சந்தித்து இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காததால் தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் இருந்து வந்திருக்கக்கூடிய விவசாயிகள் நியாயம் கிடைக்கும் வரை சென்னையில் இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

logo
vnews27
www.vnews27.com