கான்பூர் ஐஐடி மாணவர்கள் கொரோனா நான்காம் அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் எந்த ஒரு தகவலையும் அலட்சியப்படுத்திவிட முடியாது.
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா
தொற்றின் பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது. இறப்பு பூஜ்யம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா நான்காவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது.
எனவே எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். தமிழ் வழி கல்விக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.