வேலைவாய்ப்பு மற்றும் பொது அறிவையும் மாணவர்களிடையே உருவாக்கவேண்டும்

25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பொது அறிவையும் மாணவர்களிடையே உருவாக்கவேண்டும்

பொறியியல் மாணவர்கள் படிக்கும் போதே, தொழில் துறை தொடர்பான பயிற்சியை அவர்களுக்கு அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல் பாட திட்டங்களை மாற்றுவது என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் லஷ்மி பிரியா மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், எதை படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்கிற நோக்கில் தான் படிப்பை தேர்வு செய்கிறோம். இது தான் பெரும்பலான பெற்றோர்களின் நோக்கம் என்றும், வேலைவாய்ப்பு மட்டுமின்றி, பொது அறிவையும் மாணவர்களிடையே உருவாக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளித்து மாணவர்களின் திறனை உயர்த்த அவர்களை பாடத்தை நடத்தி முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com