அடுத்த வாரம் பெட்ரோல் விலை.. 1 லி-க்கு எவ்வளவு உயரும் தெரியுமா..?

தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 112 டாலரை தாண்டி உள்ளது.
அடுத்த வாரம் பெட்ரோல் விலை.. 1 லி-க்கு எவ்வளவு உயரும் தெரியுமா..?

கடந்த 3 மாதங்களுக்கு இந்தியாவில் அதிகமாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 112 டாலரை தாண்டி உள்ளது.

கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நவம்பர் மாதம் குறைத்து நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியது. மற்றும் 5 மாத தேர்தல் காரணமாக நவம்பர் மாத பாதியில் இருந்து எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உள்ளது. மற்றும் வளைகுடா நாடுகள் உடனான நீண்ட கால ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த 102 டாலர் விலை என்பது ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டின் உச்ச விலையாகும்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லிட்டருக்கு 9 ரூபாய் இந்தியா சராசரியாக 81.5 டாலர் விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. கடந்த 3.5 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20 டாலர் உயர்ந்து, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 9 ரூபாய் வரையில் உயர்த்தப்பட வேண்டும்.

ஜேபி மோர்கன் அடுத்த வாரம் 5 மாநிலத்தில் தேர்தல் முடியும் நிலையில், இந்த 9 ரூபாய் வித்தியாசத்தைச் சரி செய்ய மத்திய அரசு அடுத்த வாரம் முதல் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு நமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தாலும், இப்போது நடக்கும் உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com