மருந்துகடைகளில் பரிசோதனைகளை செய்யக்கூடாது!

மருத்துவ ஆய்வகத்தில் செய்ய வேண்டிய இரத்தம் மற்றும் சிறு நீர் பரிசோதனைகளை மருந்துகடைகளில் மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருந்துகடைகளில் பரிசோதனைகளை செய்யக்கூடாது!

சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பாரமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இவ்விழா மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவ ஆய்வகத்தில் செய்ய வேண்டிய இரத்தம் மற்றும் சிறு நீர் பரிசோதனைகளை

மருந்துகடைகளில் மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிறிய பரிசோதனை கூடங்களுக்கு பதிவு செய்யும் கட்டணத்தை 5 ஆயிரத்திலிருந்து 1000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கொரோனாவால் இறப்பு 0 என்ற நிலை வந்தாலும் கூட ஒரிரு மாதங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.4 வது அலை வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்,தமிழகத்தில் 87% அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com