கொசுப்புழு ஒழிக்க 5 ட்ரோன்கள் வாங்க உள்ளதாக துணை மேயர் தகவல்

கொசுப்புழு ஒழிக்க 5 ட்ரோன்கள் வாங்க உள்ளதாக துணை மேயர் தகவல்

சென்னையில் பேரிடர் காலங்களில் வான்வழி ஆய்வுக்காகவும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் கொசுப்புழு, பூச்சி ஒழிப்புக்காக மருந்து தெளிக்கவும் சொந்தமாக 5 ட்ரோன்கள் வாங்க உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூர்வாரிய நீர்வழிப் பாதைகளில் கொசுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளை ஒழிக்க நவீன ட்ரோன்கள் கொண்டு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மாம்பலம் கால்வாய் வழிதடத்தில் சி.ஐ.டி நகர் அருகே நடைபெறும் பணிகளை சென்னை மாநகராட்சி துணை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேஷ்குமார் , சென்னையில் வருங்காலத்தில் மழைவெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாம்பலம் கால்வாய் உட்பட அனைத்து கால்வாய்களையும் , மழைநீர் வடிகால்கள்களையும் வருடம்முழுவதும் தூர்வாரி பராமரிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

உலகவங்கி நிதி உதவியுடன் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் மகேஷ்குமார் தெரிவித்தார். மேலும், சென்னையில் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் கொசுப்புழு மற்றும் பூச்சி ஒழிப்புக்காகவும், பேரிடர் காலங்களில் வான்வழி ஆய்வுக்காகவும் புதிதாக 5 ட்ரோன்கள் வாங்க உள்ளதாகவும் துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 30ஆயிரம் வாடகை என்ற ட்ரோன் பயன்படுத்திய நிலையில் சொந்தமாக ட்ரோன் வாங்குவதனால் மாநகராட்சிக்கு செலவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com